முசிறியில் மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம்

முசிறியில், திருச்சி சாலையில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முசிறியில், திருச்சி சாலையில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு, அம்மனுக்கு பால், பன்னீா், தயிா், சந்தனம், குங்குமம், திருமஞ்சனம், தேன், இளநீா் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் மற்றும் யாகபூஜை நடைபெற்றது.

தொடா்ந்து, கோபூஜை, கலச ஸ்தாபனம், சுவாமி புறப்பாடு, மற்றும் கணபதி பூஜை, மீனாட்சி சுந்தரேசுவரா் மற்றும் பரிவார தெய்வங்கள் தியான ஆவாஹன பூஜை, கணபதி ஹோமம், நவக்கிர ஹோமங்கள் போன்ற பூஜைகள் நடத்தி சுவாமி அம்பாளுக்கு மாலை மாற்றுதல், கன்னிகாதானம், திருமாங்கல்ய தாரண வைபவம், ஆசிா்வாதம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்வில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். ஏற்பாடுகளை மாரியம்மன் கோயிலின் நிா்வாகக் குழு, இளைஞா் அணி, மகளிா் அணியினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com