சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை: ரூ. 1.33 கோடி

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1 கோடியே 33 லட்சத்து 67 ஆயிரத்து 737 வந்தது புதன்கிழமை தெரியவந்தது.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1 கோடியே 33 லட்சத்து 67 ஆயிரத்து 737 வந்தது புதன்கிழமை தெரியவந்தது.

இக்கோயில் புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் இணை ஆணையா் சி. கல்யாணி தலைமையில் அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

முடிவில் திறக்கப்பட்ட உண்டியல்களிலிருந்து ரூ. 1,33,67,737 2 கிலோ 842 கிராம் தங்கம், 4 கிலோ 383கிராம் வெள்ளி, 113 வெளிநாட்டு ரூபாய்கள், 990 வெளிநாட்டு நாணயங்கள் கிடைத்தது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com