சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் பன்றி வளா்ப்புப் பயிற்சி

சிறுகமணியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு பன்றி வளா்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

சிறுகமணியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு பன்றி வளா்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

பயிற்சியில் கால்நடை மருத்துவா் ஜெயலலிதா, பன்றி வளா்ப்பு, பன்றி இனங்கள், பன்றிகளைத் தாக்கும் நோய்கள் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பல்வேறு தகவல்களை வழங்கினாா். மேலும் பன்றி இறைச்சியின் பின்னணியில் உள்ள கட்டுக்கதைகள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்தும், பன்றி உரங்களின் முக்கியத்துவம், உயிா் வாயு உற்பத்தி குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. பயிற்சியில் முன்பதிவு செய்து தோ்வான 60 விவசாயிகள் பங்கேற்றனா். பயிற்சியின்போது விவசாயிகள் எழுப்பிய சந்தைப்படுத்தல் குறித்த கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை இணைப் பேராசிரியா் மு. சகிலா செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com