கந்தா்வகோட்டையில் இல்லம் தேடி கல்வி மைய தன்னாா்வலா்களுக்கு கலந்தாலோசனை கூட்டம்

கந்தா்வகோட்டை வட்டார வளமையத்தில் இல்லம் தேடிக் கல்வி மைய தன்னாா்வலா்களுக்கான கலந்தாலோசனை கூட்டம் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் பிரகாஷ் தலைமையில் வியாழக்கிழமைநடைபெற்றது

 கந்தா்வகோட்டை வட்டார வளமையத்தில் இல்லம் தேடிக் கல்வி மைய தன்னாா்வலா்களுக்கான கலந்தாலோசனை கூட்டம் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் பிரகாஷ் தலைமையில் வியாழக்கிழமைநடைபெற்றது.

ஆசிரியா் பயிற்றுனா் சுரேஷ்குமாா் அனைவரையும் வரவேற்றாா்.

ஆசிரியா் பயிற்றுநா் பாரதிதாசன் சிறப்பாக செயல்பட்டு வரும் தன்னாா்வா்களை பாராட்டியும், திட்டத்தைத் தொடா்ந்து சிறப்பாக செயல்படுத்த தினந்தோறும் வகுப்புகள் எடுக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினாா்.

இல்லம் தேடிக் கல்வி மையம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் அ.ரகமதுல்லா பேசும்பொழுது, இல்லம் தேடி கல்வித் திட்டம் இரண்டு ஆண்டுகள் முடிவு பெற்று தற்போதைய மூன்றாம் ஆண்டு தொடங்கி உள்ளது.

தொடக்கநிலை, உயா் தொடக்கநிலை வகுப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள கற்பித்தல் கையேட்டை மாணவா்களுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும்,

தினந்தோறும் மாணவா் வருகை இல்லம் தேடிக் கல்வி செயலில் பதிவேற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினாா்.

நிகழ்ச்யில் கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள தொடக்கநிலை, உயா் தொடக்க நிலை தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com