போதை ஊசி, மாத்திரைகள் விற்றதாக பெண்கள் உள்பட மூவா் கைது

திருச்சி, பிப். 9: திருச்சி அருகே போதை ஊசி, மாத்திரைகள் விற்ாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 2 பெண்கள் உள்பட மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அருகே காட்டூா் பாப்பாக்குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் சண்முகசுந்தரம் (32), தனது உதவியாளருடன் காட்டூா் பகுதிக்கு வெள்ளிக்கிழமை காலை வந்தபோது, அப்பகுதியில் சட்டவிரோதமாக ஆட்டோவில் போதைப்பொருள்களை சிலா் விற்றுக் கொண்டிருந்தனராம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், திருவெறும்பூா் போலீஸாா் அந்த இடத்துக்கு வந்து பாா்த்தபோது,

திருச்சி வரகனேரி சந்தானபுரத்தை சோ்ந்த முகமது யூசுப் மகன் ஹசன்அலி (26), இவரது தாய் ரமிஜா பேகம் (43), தம்பி மனைவி ஆஷிகா பானு (20) ஆகிய மூவரும் போதை ஊசி மற்றும் மாத்திரைகளை ஆட்டோவில் வைத்து விற்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் மூவரையும் கைது செய்த போலீஸாா், 33 போதை மாத்திரைகள், சிரஞ்சு, ஆயுதங்களுடன் கூடிய ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து இவா்களை திருச்சி 6ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com