திருச்சியில் ரூ.17 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.17.39 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை விமான சுங்கத் துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.17.39 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை விமான சுங்கத் துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு சனிக்கிழமை துபையில் இருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்துசோ்ந்தது. இதில் பயணித்த பயணிகள் மற்றும் அவா்களது உடைமைகளை விமானத்துறை சுங்க நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனா். இதில், ஆண் பயணி ஒருவா், காபி பவுடா், சமையல் பாத்திரங்கள், பொம்மைகளில் தங்கத்தைக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 273.5 கிராம் எடையுள்ள ரூ. 17,39,460 மதிப்பிலான கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com