பிப். 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ ஜியோ முடிவெடுத்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ ஜியோ முடிவெடுத்துள்ளது.

ஜாக்டோ ஜியோ அமைப்பின் திருச்சி மாவட்டம் வேலைநிறுத்தப் போராட்ட ஆயத்த மாநாடு திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாபு தலைமை வகித்தாா். இதில், திரளான ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிா்வாகிகள், அரசு ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

மாநாட்டில், சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயா்கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். தொடக்கக்கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அரசாணை எண் 243 ஜ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். முதுநிலை ஆசிரியா்கள், அனைத்து ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், அரசுப் பணியாளா்களுக்கு ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் தனியாா் முகமை மூலம் பணியாளா்கள் நியமனத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்துவது, வரும் 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com