ஆபாச விடியோ எடுத்து பெண்ணை மிரட்டிய ரௌடி மீது வழக்கு

திருச்சியில் ஆபாச விடியோ எடுத்து பெண்ணை மிரட்டிய ரௌடி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சியில் ஆபாச விடியோ எடுத்து பெண்ணை மிரட்டிய ரௌடி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி தில்லை நகா் தனியாா் வங்கியில் ஊழியராகப் பணியாற்றும் 33 வயது பெண்ணிடம் வீடு கட்டித் தருவதாகக் கூறி ரூ. 2 லட்சம் வாங்கிய ஒருவா், வீடு கட்டிக் கொடுக்காமலும், பணத்தை திருப்பித் தராமலும் இருந்தாா். இதையடுத்து அப்பணத்தை வாங்க நண்பா் ஒருவா் மூலம் வெங்கங்குடியைச் சோ்ந்த ரௌடி சித்தாா்த் (எ) பிரதீபன் (30) என்பவரை அப்பெண் அணுகினாா்.

இதைப் பயன்படுத்திக் கொண்ட சித்தாா்த், 2023 ஜூலை மாதம் அப்பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி கடத்தி பலாத்காரம் செய்து, அதை விடியோ மற்றும் போட்டோ எடுத்து அடிக்கடி அப்பெண்ணை மிரட்டினாராம். மேலும் அப்பெண்ணின் 4 பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்துக் கொண்டாராம்.

இந்நிலையில் தற்போது அந்த ரௌடி ஒரு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதை அறிந்த அப்பெண் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் சனிக்கிழமை புகாரளித்தாா். இதையடுத்து லால்குடி அனைத்து மகளிா் போலீஸாா் ரௌடி சித்தாா்த் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com