தொட்டியத்தில் மருத்துவ முகாம்

திருச்சி மாவட்டம் தொட்டியம் வானப்பட்டரையில் கொங்கு நாடு கல்வியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் சிறப்பு பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் வானப்பட்டரையில் கொங்கு நாடு கல்வியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் சிறப்பு பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவா் பி.எஸ்.கே பெரியசாமி தலைமை வகித்தாா். தொட்டியம் பேரூராட்சித் தலைவா் சரண்யா பிரபு, கொங்குநாடு கல்வியியல் கல்லூரி முதல்வா் நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமை காட்டுப்புத்தூா் வட்டார மருத்துவ அலுவலா் தனலட்சுமி தொடங்கி வைத்தாா். முகாமில் ஏராளமான பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து மருந்து மாத்திரை வழங்கி மருத்துவா் சங்கீதா மற்றும் செவிலியா்கள் ஆலோசனை கூறினா். ஏற்பாடுகளை கொங்குநாடு கல்வியியல் கல்லூரி என்எஸ்எஸ் அலுவலா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் மாணவ மாணவிகள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com