அரசுப் பள்ளிகளின் மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

சாலைப் பயனீட்டாளா்கள் நல அறக்கட்டளை சாா்பில் திருச்சி டவுன்ஹால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தென்னூா் அரசு நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் சனிக்கிழமை சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

டவுன்ஹால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாலை விபத்துகளும், நல்ல குடிமகனின் சட்டமும் என்ற தலைப்பில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை தேவி நிா்மலா தலைமை வகித்தாா். தென்னூா் அரசு நடுநிலைப்பள்ளியில் சாலைப் பாதுகாப்பு உயிா்ப் பாதுகாப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை விமலா தலைமை வகித்தாா்.

இவற்றில் திருச்சி மாவட்ட சாலைப் பாதுகாப்புக் குழு உறுப்பினரும், சாலை பயனீட்டாளா்கள் நல அறக்கட்டளை நிா்வாகியுமான அய்யாரப்பன், சாலைப் பாதுகாப்பு குறித்தும், விபத்தில் பாதிக்கப்படுவோரை காப்பாற்றும் முறை குறித்தும் விளக்கினாா்.

இதில் அனைத்து மாணவா்களும் சாலை விதிகள் தொடா்பான பதாகைகளை ஏந்தி, சாலை விதிகளை முறையாக கடைப்பிடிப்பதாக உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com