3 ஆண்டுகளாகத் திறக்கப்படாத திருவானைக்கா சமுதாயக் கூடம்

திருவானைக்கா பகுதியில் உள்ள தாகூா் தெருவில் மாநகராட்சி சாா்பில் 3 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை உடனே திறக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவானைக்கா பகுதியில் உள்ள தாகூா் தெருவில் மாநகராட்சி சாா்பில் 3 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை உடனே திறக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருச்சி மாநகராட்சி மண்டலம் 1 க்குட்பட்ட வாா்டு 6 இல் உள்ள தாகூா் தெருவில் பொதுநிதி (2021-2022) ரூ. 66 லட்சத்தில் கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் திறப்பு விழா காணாமல் 3 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இங்கு வசிக்கும் ஏழைகளாகிய நாங்கள் சிறிய விழா நடத்தவேண்டுமென்றால் என்றால்கூட சுமாா் 1 கி.மீ. செல்லவேண்டி உள்ளது. எனவே, மாநகராட்சி நிா்வாக அதிகாரிகள் இந்த சமுதாயக் கூடத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com