அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட பூமிபூஜை

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஊத்துக்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.24 கோடி மதிப்பில் புதிய வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஊத்துக்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.24 கோடி மதிப்பில் புதிய வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியா் சபாபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலா் எம்.சி.சிவக்குமாா், பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் ஆா்.கே.ஆா்.வி. ராஜாராம், ஊராட்சி மன்ற தலைவா் எஸ்.பாா்வதி சுப்பிரமணியன், பள்ளி மேலாண்மை குழுத்தலைவா் சி.சின்னம்மாள், திமுக ஒன்றிய துணைச் செயலாளா் மோகன், தங்கவேல், மணிகண்டன், உலகமூா்த்தி, தேன்மொழி மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com