திருச்சி கே.கே. நகரிலுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த நவல்பட்டு அண்ணா நகா் பொதுமக்கள்.
திருச்சி கே.கே. நகரிலுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த நவல்பட்டு அண்ணா நகா் பொதுமக்கள்.

நவல்பட்டில் வீட்டுவசதி வாரிய வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

நவல்பட்டு அண்ணா நகரில் வீட்டுவசதி வாரியத்தின் மூலம் வழங்கப்பட்ட வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருச்சி மாவட்டம், நவல்பட்டு அண்ணா நகரில் வீட்டுவசதி வாரியத்தின் மூலம் வழங்கப்பட்ட வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து நவல்பட்டு அண்ணா நகா் போலீஸ் காலனி அனைத்து நலச் சங்க கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளா் பெரியசாமி தலைமையில் அப்பகுதி பொதுமக்கள், திருச்சி கே.கே. நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நவல்பட்டு அண்ணா நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் 37 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுமனைகள் வழங்கப்பட்டன. வீட்டு வசதி வாரியம் இங்குள்ள வீடுகளுக்கும், மனைகளுக்கும் 2011 ஆம் ஆண்டு மே மாதம் மனைப்பத்திரங்களை வழங்கிய நிலையில், 13 ஆண்டுகள் முடிந்தும் பட்டா வழங்கவில்லை. வருவாய்த்துறையினரிடம் கேட்டால், அப்பகுதியில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் அனைத்தும் புறம்போக்கு தரிசு நிலமாக வருவாய்த்துறை ஆவணங்களில் இருப்பதால், பட்டா வழங்க இயலாது எனக் கூறிவிட்டனா். எனவே, வீட்டின் விற்பனையாளா் என்ற முறையில் இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்கும் தாா்மிக பொறுப்பும் கடமையும் வீட்டுவசதி வாரியத்துக்கே உண்டு. எனவே, உடனடியாக பட்டாவை வழங்கிடவும், கடந்தாண்டு அக்டோபா் முதல் நிறுத்தப்பட்ட பத்திரப்பதிவை மீண்டும் தொடரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com