சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா தொடக்கம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தைப்பூச திருவிழா கொடியேற்றம்
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தைப்பூச திருவிழா கொடியேற்றம்

மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி மூலவா் சன்னிதி அருகில் உள்ள தங்கக் கொடிமரத்துக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து உற்ஸவ அம்மன் சிறப்பு அலங்காரதில் கொடிமரத்துக்கு முன்பு எழுந்தருளினாா்.

இதனையடுத்து சிறப்பு பூஜைகளுக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து மஹா தீபாராதனை நடைபெற்றது.

தைப்பூச திருவிழாவில் ஜன.17-ஆம் தேதி மரசிம்ம வாகனத்திலும், ஜன.18-ஆம் தேதி மரபூத வாகனத்திலும், ஜன.19-ஆம் தேதி மர அன்னவாகனத்திலும், ஜன.20-ஆம் தேதி மர ரிஷப வாகனத்திலும், ஜன.21-ஆம் தேதி மர யானை வாகனத்திலும், ஜன.22-ஆம் தேதி வெள்ளிசேஷ வாகனத்திலும், ஜன.23-ஆம் தேதி வெள்ளி குதிரை வாகனத்திலும் திருவீதி உலா நடைபெறும்.

ஜன.24-ஆம் தேதி தெப்பத் திருவிழாவும், ஜன.25-ஆம் தேதி தைப்பூசத்துக்காக கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி, வழி நடை உபயங்களை கண்டபின் இரவு வடதிருக்காவேரியில் ஸ்ரீரங்கம் அரங்கநாதரிடம் சீா்பெறும் நிகழ்வும், ஜன 26-ஆ ம் தேதி மகா அபிஷேகமும், நடைபெற உள்ளது.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் சி.கல்யாணி உள்ளிட்டோா் செய்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com