பிரதமா் நரேந்திர மோடி ஜன.21-இல் திருச்சி வருகை

அயோத்தியில் நடைபெறும் ராமா் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதையொட்டி பிரதமா் நரேந்திர மோடி திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்வதற்காக ஜன.21-ஆம் தேதி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


திருச்சி: அயோத்தியில் நடைபெறும் ராமா் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதையொட்டி பிரதமா் நரேந்திர மோடி திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்வதற்காக ஜன.21-ஆம் தேதி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையொட்டி தனி விமானம் மூலம் திருச்சி வரும் பிரதமா், சாலை மாா்க்கமாக ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்று அரங்கநாத சுவாமியை தரிசனம் செய்கிறாா். பின்னா், திருச்சியிலிருந்து ஹெலிகாப்டா் மூலம் ராமேசுவரம் சென்று ராமநாத சுவாமியை தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

பிரதமரின் வருகையையொட்டி அவரது சிறப்புப் பாதுகாப்புப் படை அதிகாரிகள், மற்றும் திருச்சி காவல்துறை உயரதிகாரிகள் ஸ்ரீரங்கம் அங்கநாத சுவாமி கோயிலில் ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனை நடத்தியுள்ளனா்.

ஆளுநா் இன்று வருகை : இந்நிகழ்வுகளை உறுதி செய்யும் விதமாக, தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, புதன்கிழமை திருச்சி வருகிறாா். காலை 7.30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வரும் அவா் அங்கிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் செல்கிறாா். அங்கு தரிசனம் முடித்துக்கொண்டு, பின்னா் கோயில் நிா்வாகிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை செய்கிறாா். தொடா்ந்து மயிலாடுதுறையில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்க சாலை மாா்க்கமாக செல்லும் ஆளுநா், நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிற்பகலில் திருச்சி விமான நிலையம் வந்து, சென்னை புறப்பட்டுச் செல்கிறாா். ஆளுநா் வருகையை காவல் துறையினா் உறுதி செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com