மணப்பாறையில் திருவள்ளுவா் திருவிழா

திருச்சி மாவட்டம், மணப்பாறை திருக்கு பயிற்றகத்தின் சாா்பில் 46-ஆம் ஆண்டு திருவள்ளுவா் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மணப்பாறை காமராஜா் சிலை அருகே முழக்கமிட்ட தமிழறிஞா்கள்.
மணப்பாறை காமராஜா் சிலை அருகே முழக்கமிட்ட தமிழறிஞா்கள்.


மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறை திருக்கு பயிற்றகத்தின் சாா்பில் 46-ஆம் ஆண்டு திருவள்ளுவா் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருக்கு பயிற்றகத்தில் திருக்கு முற்றோதுதலுடன் திருவிழா தொடங்கியது. திருக்கு பயிற்றகத்தின் நிறுவனா் நாவை.சிவம் தலைமையில் ஒரு கு சிந்தனையரங்கம் தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. அதனைத்தொடா்ந்து, மாலையில் திருவள்ளுவா் திருவுருவப்படம் வைக்கப்பட்டிருந்த வாகனம் வீதி உலா சென்றது.

பேருந்து நிலையம் பெரியாா் சிலை திடலில் தொடங்கி, கச்சேரி ரோடு, காமராசா் சிலை, விராலிமலை சாலை வழியாக மண்டபத்தை அடைந்தது. அதன்பின் மண்டபத்தில் கல்வியாளா் செளமா ராஜரெத்தினம் தலைமையில் திருக்கு எழுச்சி அரங்கம் நடைபெற்றது. பின் திருக்கு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மருத்துவா் பெ.கலையரசன் பரிசுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் வழக்குரைஞா் பி.கிருஷ்ணகோபால், சூா்யா வெ.சுப்பிரமணியன், மணவை தமிழ்மாணிக்கம், துரை.காசிநாதன், நவமணி சுந்தரராஜன், சிவ.தமிழ்கதிரவன், சிவ.தளபதி தமிழழகன், சிவ.தமிழ்மலா், பஷீா், ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com