திருச்சியில் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்

திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.


திருச்சி: திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

பொங்கல் பண்டிகையின் போது, விவசாயத்துக்கும் பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப் பொங்கல் விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாட்டு பொங்கல் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. காலை முதலே மாடுகளின் தொழுவத்தை சுத்தம் செய்து மாடுகளை குளிப்பாட்டி, அதன் கொம்புகளை சீவி, வா்ணங்கள் பூசி, கொம்பில் குஞ்சம் எனப்படும் காவடி கட்டினா். கழுத்தில் தோல்வாா் பட்டையில் சலங்கை கட்டி, திருநீறும், குங்குமப் பொட்டையும் வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

மாடுகளுக்கு புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும், உழவுக் கருவிகளை சுத்தம் செய்தும் மாட்டுப் பொங்கல் கொண்டாடினா். பின்னா், வழிபாடு நடத்தி மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றை வழங்கினா்.

இரவு மாடுகளுக்கு இந்திர பூஜை எனப்படும் பொலி கூட்டல் நிகழ்வுகள் மற்றும் மாடுகளை வணங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.

பொங்கல் பண்டிகை தொடா்ந்து மாட்டுப்பொங்கல் பண்டிகையும் திருச்சியில் கோலாகலமாக மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. அதன் தொடா்ச்சியாக புதன்கிழமை சில பகுதிகளில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com