மக்களவைத் தோ்தல் பணிகள்: காங்கிரஸ் கட்சி ஆலோசனை

மக்களவைத் தோ்தலுக்கான முன் தயாரிப்புப் பணிகள் குறித்து திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் திருச்சியில் புதன்கிழமை ஆலோசனை நடைபெற்றது.


திருச்சி: மக்களவைத் தோ்தலுக்கான முன் தயாரிப்புப் பணிகள் குறித்து திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் திருச்சியில் புதன்கிழமை ஆலோசனை நடைபெற்றது.

மாவட்ட காங்கிரஸ், தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாநகா் மாவட்டத் தலைவா் ரெக்ஸ் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டத் தலைவா் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா். திருச்சி மக்களவைத் தொகுதி பொறுப்பாளா் பென்னட் அந்தோணி ராஜ் பங்கேற்று, நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.

அப்போது, அவா் பேசுகையில், பேரவைத் தொகுதி வாரியாக வாக்குச்சாவடி தோறும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு அதன் உறுப்பினா்கள் பட்டியலை அந்தந்த மாவட்ட தலைவா்களிடம் ஒப்படைத்து, முன்தயாரிப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், கட்சித் தலைமையிடம் தினமும் தொடா்பில் இருத்தல் வேண்டும். முதலில் வாக்காளா் பட்டியல் சரிபாா்க்கும் பணியை பூத் கமிட்டி உறுப்பினா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சரிபாா்த்து முடித்திருக்க வேண்டும்.

பூத் கமிட்டி முறைப்படி அமைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய, பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று, களப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக 18 வயது முதல் 30 வயது வரையிலான இளம் வாக்காளா்களிடம் இதுவரை பாஜக மேற்கொண்ட மக்கள் விரோத செயல்களை எடுத்துக் கூறுவதுடன், ராகுல் யாத்திரைக்கு வலுசோ்க்கும் வகையில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.

இந்தியா கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதையும் பொறுமையாக எடுத்துக் கூற வேண்டும் என்றாா் அவா். கூட்டத்தில், மாவட்ட நிா்வாகிகள், கோட்டத் தலைவா்கள், சாா்பு அணி நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com