முதல்வா் படத்தை சேதப்படுத்தியவா் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சித்தாநத்தம் பகுதியில் தமிழக முதல்வரின் படத்தை சேதப்படுத்திய இளைஞரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.


மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சித்தாநத்தம் பகுதியில் தமிழக முதல்வரின் படத்தை சேதப்படுத்திய இளைஞரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

மணப்பாறை அடுத்த சித்தாநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் கோபால். இவா் அப்பகுதியின் வாா்டு உறுப்பினா். இவா், சித்தாநத்தம் கிராமத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் பேனா் வைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில், அந்த பேனரில் இருந்த தமிழக முதல்வரின் புகைப்படத்தை அதே பகுதியினை சோ்ந்த மணி மகன் கோபால்(27), கோபாலகிருஷ்ணன் மகன் 16 வயது சிறுவன் ஆகிய இருவரும் சேதப்படுத்திய விடியோ சமூக வலைத்தளங்களில் செவ்வாய்க்கிழமை பதிவிட்டனா்.

இது குறித்து கோபால் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிந்த மணப்பாறை போலீஸாா் இளைஞா் கோபாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா். சிறுவன் காவல்நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com