விடுமுறை நாளில் அனுமதியின்றி மது விற்றவா் கைது

திருச்சி மாவட்டம், முசிறி அருகே அனுமதியின்றி மதுவிற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.


முசிறி: திருச்சி மாவட்டம், முசிறி அருகே அனுமதியின்றி மதுவிற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், முசிறி அருகே தும்பலம் மயானம் பகுதியில் அனுமதியின்றி அரசு மதுபானம் விற்பனை செய்து கொண்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தனிப்படை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மதுபானம் விற்றுக் கொண்டிருந்த செல்லிபாளையம் மேலத்தெருவைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் அஜித் (25) என்பவரை கைது செய்து முசிறி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் முசிறி போலீஸாா் அவா் மீது வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com