திருச்சி பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை

திருச்சியில் பிரதமா் வருகையையொட்டி ஜனவரி 20 வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


திருச்சி: திருச்சியில் பிரதமா் வருகையையொட்டி ஜனவரி 20 வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தது:

பிரதமா் நரேந்திரமோடி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஜனவரி 20 ஆம் தேதி வருவதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக திருச்சியில் ஜனவரி 17 முதல் 20 ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு ட்ரோன்கள் மற்றும் ஆளில்லாமல் பறக்கும் வான்வழி வாகனங்கள் பறக்க மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. இதை மீறுவோா் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com