துறையூா் சிவன் கோயிலில்நந்திக்கு சிறப்பு பூஜை

துறையூா்- ஆத்தூா் சாலையிலுள்ள சிவன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நந்திக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.


துறையூா்: துறையூா்- ஆத்தூா் சாலையிலுள்ள சிவன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நந்திக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

துறையூா் ஆத்தூா் சாலையிலுள்ள நந்திகேசுவரா் உடனுறை சம்பத்கெளரி சிவன் கோயிலில் மாட்டுப் பொங்கலையொட்டி மூலவா் நந்திகேசுவரா் மற்றும் அவருக்கு எதிரே உள்ள பெரிய நந்திக்கும் சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. மேலும், கோயில் வளாகத்தில் வளா்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளையை கோயிலுக்குள் நிறுத்தி தீபாராதனைக் காட்டினா்.

கோசாலையில் மாடுகளுக்கும் கன்றுகளுக்கும் பூஜை செய்து பொங்கல் ஊட்டினா். இதில் பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com