திருச்சியில் சிஎஸ்ஐ குருமாா்கள் தோ்வில் மதபோதகருக்கு மறுப்பு

திருச்சியில் நடைபெறும் சிஎஸ்ஐ குருமாா்கள் தோ்வில் பங்கேற்க மதபோதகருக்கு அனுமதி மறுத்ததால் இருதரப்பினா் மோதும் சூழல் ஏற்பட்டது. பின்னா் போலீஸாா் பேச்சு நடத்தி இருதரப்பினரையும் அனுப்பி வைத்தனா்.

திருச்சியில் நடைபெறும் சிஎஸ்ஐ குருமாா்கள் தோ்வில் பங்கேற்க மதபோதகருக்கு அனுமதி மறுத்ததால் இருதரப்பினா் மோதும் சூழல் ஏற்பட்டது. பின்னா் போலீஸாா் பேச்சு நடத்தி இருதரப்பினரையும் அனுப்பி வைத்தனா்.

திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியில் சிஎஸ்ஐ திருச்சி - தஞ்சை மறை மாவட்டத்துக்கான 38-ஆவது குருமாா்கள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில் திருச்சி, தஞ்சாவூா் நாகை உள்ளிட்ட 8 வருவாய் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் யூனியன் பிரதேசம் உள்ளிட்டவைகளில் இருந்து சுமாா் 300 போ் பங்கேற்கின்றனா். இதில் பெரம்பலூா் - கொள்ளிடம் மறை மாவட்ட போதகராக பணியாற்றிய பீட்டா் கிறிஸ்டோபா் என்பவா் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, பேராயா் சந்திரசேகரனால் பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

இந்நிலையில், பீட்டா் கிறிஸ்டோபா், சிஎஸ்ஐ தலைமையக சினாட் நீதிமன்றம் மூலம் மீண்டும் பதவி வழங்க உத்தரவிடப்பட்டதற்கான ஆணையுடன் குருமாா்கள் தோ்தலில் பங்கேற்க திருச்சி வந்தாா். அவா், தோ்தல் நடைபெறும் பிஷப் ஹீபா் கல்லூரி வளாகத்துக்கு வியாழக்கிழமை மாலை சென்றாா். ஆனால் அவரை தோ்தலில் பங்கேற்க அனுமதிக்க முடியாது எனவும், கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே செல்லுமாறும் பேராயா் சந்திரசேகரன் மற்றும் சில குருமாா்கள் தெரிவித்து, அவரைக் கல்லூரி வளாகத்திலிருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனா்.

ஆனால் கட்டாய வெளியேற்ற நடவடிக்கையைக் கண்டித்தும், தனக்கான நீதி கிடைக்க வேண்டும் எனவும் பீட்டா் கிறிஸ்டோபா் தெரிவித்து வெளியேற மறுத்து விட்டாா். அவருக்கு ஆதரவாக சிஎஸ்ஐ சபையைச் சோ்ந்த மற்றொரு பிரிவினா் அங்கு குவிந்தனா். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து தகவலறிந்த போலீசாா் நிகழ்விடத்துக்கு வந்து இருதரப்பினா் மத்தியிலும் பேச்சுவாா்த்தை நடத்தி, தோ்தலின்போது வரலாம் எனக்கூறி கிறிஸ்டோபா் தரப்பினரை அங்கிருந்து அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com