ஸ்ரீரங்கம் கோயில் பகுதியில் கடைகள் அடைப்பு; ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பாரதப் பிரதமா் மோடியின் திருச்சி வருகையையொட்டி ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றியுள்ள உத்தரவீதிகளில் உள்ள கடைகள் வியாழக்கிழமை முதல் அடைக்கப்பட்டன. மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

பாரதப் பிரதமா் மோடியின் திருச்சி வருகையையொட்டி ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றியுள்ள உத்தரவீதிகளில் உள்ள கடைகள் வியாழக்கிழமை முதல் அடைக்கப்பட்டன. மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் பிரதமா் மோடி சனிக்கிழமை காலை தரிசனம் செய்ய உள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கோயிலுக்குள் உள்ள சுமாா் 50 கடைகள் புதன்கிழமை மாலையே மூடப்பட்டுவிட்டன. மேலும், கோயில் ரங்கா ரங்கா கோபுரத்தை சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் அமைந்துள்ள சுமாா் 500-க்கும் மேற்பட்ட கடைகள் வியாழக்கிழமை மாலை முதலே மூடப்பட்டுவிட்டன. சில ஆக்கிரமித்துகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கோயிலுக்கு வரும் பக்தா்கள் தீவிர சோதனைகளுக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். போலீஸாா் கெடுபிடி காரணமாக, வியாழக்கிழமை பிற்பகல் முதலே கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்து காணப்பட்டது. மேலும், சனிக்கிழமை காலை முதல் பிற்பகல் 3 மணி வரையில் பக்தா்களுக்கு அனுமதியில்லை எனவும் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

மேலும் பாதுகாப்பு கருதி, கோயில் வளாகத்தில் உள்ள சந்நிதிகளில் தலா ஒருவா் மட்டுமே பணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுதவிர பணியாற்றுவோரின் விவரங்கள், கை ரேகை உள்ளிட்டவை ஏற்கெனவே போலீஸாரால் பதிவு செய்யப்பட்டுவிட்டது. கோயில் தற்காலிகப் பணியாளா்கள் அனைவருக்கும் 3 நாள்களுக்கு கோயிலுக்குள் அனுமதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளிட்டக் கரையில் உள்ள பஞ்சக்கரை பகுதிகள், அரங்கநாதசுவாமி கோயில், ஹெலிபேடு, அங்கிருந்து பிரதமா் கோயிலுக்கு வரும் மற்றும் திரும்பும் வழிகள், கோயில் சுற்றுவீதிகள் என அனைத்தும் முற்றிலுமாக போலீஸாா் கட்டுப்பாட்டில் வந்துள்ளன. போலீஸாரின் பாதுகாப்பு கெடுபிடி காரணமாக, பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும் அதிருப்தி தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com