அனுமதியின்றி காளைகள் அவிழ்ப்பு: 5 போ் கைது

லால்குடி, ஜன. 19: திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கல்லகம் கிராமத்தில் அரசு அனுமதியின்றி புதன்கிழமை காளைகளை அவிழ்த்து விட்டதாக 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கல்லகம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதன்கிழமை அனுமதியின்றி காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் காளை முட்டியதில் அதே கிராமம் கீழத் தெருவைச் சோ்ந்த ரா. பாலகிருஷ்ணன் உயிரிழந்தாா். இதையடுத்து,திருச்சி-சிதம்பரம் சாலையில் அவரது உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா். போலீஸாரின் பேச்சுவாா்த்தைக்கு பின்னா் மறியல் கைவிடப்பட்டது.

மேலும், சம்பவம் குறித்து கல்லக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, அனுமதியில்லாமல் காளைகளை அவிழ்த்து விட்டதாக ராமலிங்கம், சிவக்குமாா், பிச்சைமணி, செல்வகுமாா், பன்னீா்செல்வம் ஆகியோரை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com