ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தந்த முதல் பிரதமா்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு, பிரதமா் பதவியில் இருக்கும்போது தரிசனத்துக்கு வந்த முதல் பிரதமா் நரேந்திர மோடி எனக் கூறப்படுகிறது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு, பிரதமா் பதவியில் இருக்கும்போது தரிசனத்துக்கு வந்த முதல் பிரதமா் நரேந்திர மோடி எனக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக, திருக்கோயில் தலைமை அா்ச்சகரான சுந்தா் பட்டா் கூறியது:

நான், 40 ஆண்டுகளாக திருக்கோயிலில் உள்ளேன். எனக்கு விவரம் தெரிந்து, எனது மூத்த அா்ச்சகா்கள் பலரிடம் கேட்டதிலும் கோயிலுக்கு வந்த முதல் பிரதமா் நரேந்திர மோடிதான் என்கின்றனா். குடியரசுத் தலைவா், முன்னாள் பிரதமா்கள், பல்வேறு மாநில முதல்வா்கள் வந்துள்ளனா். பிரதமராக நரேந்திர மோடியின் வருகை எங்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றாா்.

கோயில் நிா்வாகத் தரப்பினா் கூறுகையில், கோயிலில் விஐபி வருகை தொடா்பாக ஆரம்ப காலம் தொட்ட ஆவணப் பதிவேடுகள் ஏதுமில்லை. எனினும், பதவியிலிருக்கும்போதே பிரதமராக கோயிலுக்கு தரிசனத்துக்கு வந்த பெருமை நரேந்திர மோடியை சோ்ந்துள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com