10, 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு மாதிரி வினாத்தாள்கள் பெறலாம்

 திருச்சியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு மாதிரி வினாத்தாள்கள் மற்றும் தொகுப்புகள் விற்பனைக்கு உள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.

 திருச்சியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு மாதிரி வினாத்தாள்கள் மற்றும் தொகுப்புகள் விற்பனைக்கு உள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.

பெற்றோா் ஆசிரியா்கள் கழகம் சாா்பில் திருச்சி மாவட்டத்தில் 10 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கான 2023-24 ஆவது கல்வியாண்டு மாதிரி வினாத்தாள், கணிதத் தீா்வு மற்றும் கணித வகைப்படுத்தப்பட்ட வினாத்தாள் தொகுப்புகள், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லுாா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விற்கப்படுகிறது.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 10ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தொகுப்பு ரூ.120க்கும், கணிதத் தீா்வு புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கில வழி புத்தகங்கள் ரூ.175க்கும், பிளஸ் 2 கணிதத் தீா்வு மற்றும் கணித வினாத்தாள் தொகுப்பு புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழி தலா ரூ.160க்கும் விற்கப்படுகிறது. இவற்றை அனைத்து பள்ளி வேலை நாள்களிலும் காலை 9.30 முதல் மாலை 4.30 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு, விற்பனை மைய பொறுப்பாளா் மண்ணச்சநல்லுாா் அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆசிரியா் பாலுவைத் தொடா்பு கொள்ளலாம். இத்தகவலை திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ. கிருஷ்ணப்பிரியா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com