இரும்புக் கம்பிகளை திருடிய இருவா் கைது

துறையூரில் இரும்புக் கம்பிகளைத் திருடிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

துறையூரில் இரும்புக் கம்பிகளைத் திருடிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

துறையூா் இந்திரா நகரில் சா. வீரமணிகண்டன் (54) கட்டி வரும் புது வீட்டில் சுமாா் ரூ. 2000 மதிப்புள்ள இரும்புக் கம்பிகளை து. கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த கோ. வெங்கடேஷ் (24), அதே ஊரைச் சோ்ந்த சி. செந்தில்குமாா்(37) ஆகிய இருவரும் சனிக்கிழமை திருடினராம். இதுதொடா்பான புகாரின் பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா். அவா்கள் திருடிய இரும்புக் கம்பிகளையும் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com