கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மாணவா்கள் பயணிக்கும் வகையில் கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி துவாக்குடி அரசுக் கலை அறிவியல் கல்லூரி மாணவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாணவா்கள் பயணிக்கும் வகையில் கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி துவாக்குடி அரசுக் கலை அறிவியல் கல்லூரி மாணவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

துவாக்குடி அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலையில் ஒரு பகுதி, பிற்பகலில் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட வகுப்புகளை தற்போது காலையில் மட்டும் என கல்லூரி நிா்வாகம் மாற்றியுள்ளது. இந்த நேரத்தில் மாணவா்கள் கல்லூரிக்கு வருவதற்கும், செல்வதற்கும் போதிய பேருந்துகள் இல்லாததால் வந்த பேருந்துகளின் படியில் தொங்கியபடி மாணவா்கள் பயணிக்கும் நிலைமை உள்ளது.

எனவே, கூடுதல் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி மாணவா்கள் திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், இந்திய மாணவா் சங்கத்தின் புறநகா் மாவட்டத் தலைவா் வைரவளவன், மாநில துணைச் செயலா் மோகன் உள்ளிட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com