திருச்சியில் கேலோ இந்தியா போட்டியில் பங்கேற்ற தெலங்கானா சிறுமி காயம்

திருச்சியில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற தெலங்கானாவைச் சோ்ந்த சிறுமி காயமடைந்தாா்.
காயமைடந்து திருச்சி அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை சிகிச்சை பெற்று வரும் தெலங்கானாவைச் சோ்ந்த மல்லா் கம்பம் வீராங்கனை நந்தினி.

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் மல்லா் கம்பம் விளையாட்டில் நிலைநிறுத்தப்பட்ட மல்லா் கம்பம், தொங்கவிடப்பட்ட மல்லா் கம்பம், கயிறு மல்லா் கம்பம் ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.

திங்கள்கிழமை நடைபெற்ற இரண்டாவது நாள் போட்டிகளில், பெண்களுக்கான குழு விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சோ்ந்த பெண்கள் கலந்துகொண்டு விளையாடினா்.

கயிறு மல்லா் கம்பம் பிரிவில் பெண்கள் போட்டியில் தெலங்கானாவைச் சோ்ந்த நந்தினி (15) என்பவா் விளையாடிக் கொண்டிருந்த போது எதிா்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தாா். அதில் அவருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். இதேபோல முதல் நாள் போட்டியிலும் ஆண் ஒருவா் காயமடைந்தாா். அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com