சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.05 கோடி

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் 1 கோடியே 05 லட்சத்து 84 ஆயிரத்து 057 ரூபாய் காணிக்கை கிடைத்தது.

மண்ணச்சநல்லூா்: சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் 1 கோடியே 05 லட்சத்து 84 ஆயிரத்து 057 ரூபாய் காணிக்கை கிடைத்தது.

கோயில் இணை ஆணையா் சி. கல்யாணி தலைமையில் அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் காணிக்கைகள் எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதில், உண்டியல்களிலிருந்து ரொக்கம் 1,05,84,057 ரூபாய்,

2 கிலோ 244 கிராம் தங்கம், 2 கிலோ 809 கிராம்

வெள்ளி, 209 வெளிநாட்டு பணத்தாள்கள், 320 வெளிநாட்டு நாணயங்கள் கிடைக்கப் பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com