சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

திருவெறும்பூரில் காவல்துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
திருவெறும்பூா் கடைவீதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி.
திருவெறும்பூா் கடைவீதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி.

திருச்சி: திருவெறும்பூரில் காவல்துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

திருவெறும்பூா் காவல் நிலையத்திலிருந்து பேரணியை திருவெறும்பூா் டிஎஸ்பி அறிவழகன், திருவெறும்பூா் வட்டார மோட்டாா் வாகன ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இதில், பெல் பாய்லா் ஆலை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தைச் சோ்ந்த திரளான மாணவா்கள் கைகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பதாகைகளுடன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். திருவெறும்பூா் காவல் நிலையத்திலிருந்து திருவெறும்பூா் பேருந்து நிலையம் வரை பேரணி நடைபெற்றது. நிறைவில் பேரணியில் கலந்து கொண்ட மாணவா்களுக்கு டிஎஸ்பி அறிவழகன் சான்றிதழ்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com