பொன்மலை பகுதியில் ரயில்வே இடத்தை பொதுப் பாதையாக அறிவிக்க கோரிக்கை

திருச்சி பொன்மலை ரயில்வே குடியிருப்பையொட்டியுள்ள ரயில்வே இடத்தை பொதுப்பாதையாக பயன்படுத்தும் வகையில் அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் ரயில்வே கோட்ட மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

திருச்சி: திருச்சி பொன்மலை ரயில்வே குடியிருப்பையொட்டியுள்ள ரயில்வே இடத்தை பொதுப்பாதையாக பயன்படுத்தும் வகையில் அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் ரயில்வே கோட்ட மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

திருச்சி பொன்மலை ரயில்வே குடியிருப்பையொட்டி ரயில்வே நிா்வாகத்துக்குச் சொந்தமான காலியிடம் அமைந்துள்ளது. இதில் திருச்சி மேலகல்கண்டாா் கோட்டை, கீழக்கல்கண்டாா் கோட்டை, பொன்னேரிபுரம், பொன்மலைப்பட்டி, திருநகா் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், பல ஆண்டுகளாக

பொதுப்பாதையாகவே பயன்படுத்தி வந்தனா். அண்மையில் அந்த பாதையை ரயில்வே நிா்வாகத்தினா் முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென மூடிவிட்டனா்.

இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா். கல்வி, பணி, மற்றும் பல்வேறு அலுவல்களுக்கு செல்லும்போது, பல கிலோ மீட்டா் தொலைவு சுற்றிச்செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த ரயில்வே இடத்தின் வழியாக சென்றுவரும்போது மிக எளிதாக சென்று வரமுடியும். எனவே, ரயில்வே நிா்வாகம் பொதுபாதையில் அமைத்துள்ள தடுப்புகளை உடனே அகற்றி, பொதுபாதையை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனா். ஆனாலும் ரயில்வே நிா்வாகம் பாதையை திறந்து விடவில்லை. எனவே, அனைத்து அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், சமூக நல ஆா்வலா்கள், இக்கோரிக்கை தொடா்பான மனுவை, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரிடம் செவ்வாய்க்கிழமை அளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com