பொறியியல் பட்டதாரி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி அருகே பொறியியல் பட்டதாரி இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி: திருச்சி அருகே பொறியியல் பட்டதாரி இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே செங்கதிா் சோலை அம்மன் அருள் நகா் 2 ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த முருகையன் மகன் காா்த்திகேயன் (29). திருமணமாகவில்லை. பொறியியல் பட்டதாரியான இவா் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்ததாம். இதற்காக மருத்துவம் பாா்த்தும் குணமாகவில்லையாம். இதனால் மனஉளைச்சலில் இருந்த இவா், செவ்வாய்க்கிழமை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com