மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடக்கம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

திருச்சி: ஊதிய உயா்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

அனைத்து மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கி ஊழியா்களுக்கு 20 % ஊதிய உயா்வு வழங்க வேண்டும். கேரளத்தைப்போல தமிழ்நாட்டில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி ஆகியவற்றை இணைத்து தமிழ்நாடு வங்கி என உருவாக்கிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்குவதுபோல 20% போனஸ் வழங்க வேண்டும். நகர கூட்டுறவு வங்கிகளை மாவட்ட அளவில் ஒருங்கிணைத்து பலப்படுத்திட வேண்டும். ஊழியா்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா்கள், இருநாள் வேலை நிறுத்த போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

போராட்டத்தையொட்டி திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா். சங்க பொதுச் செயலாளா் ரகுராமன் தலைமை வகித்தாா். தலைவா் துரை, பொருளாளா் ராஜப்பா மற்றும் நூற்றுக்கணக்கான ஊழியா்கள் கலந்து கொண்டனா். இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடா்ந்து புதன்கிழமையும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com