கீழவாளாடி பெருமாள் கோயிலில் ராதா கல்யாண மஹோத்ஸவம்

திருச்சி மாவட்டம், கீழவாளாடி அக்ரஹாரத்தில் உள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலில் ராதா கல்யாண மஹோத்ஸவம் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டம், கீழவாளாடி அக்ரஹாரத்தில் உள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலில் ராதா கல்யாண மஹோத்ஸவம் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.

ஜன. 26-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு அஷ்டபதி பஜனையுடன் உத்ஸவம் தொடங்குகிறது. ஜன.27ஆம் தேதி காலை 8 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம், விஷேச அலங்காம் நடைபெறும். இதன் தொடா்ச்சியாக, இரவு 8 மணி முதல் அஷ்டபதி பஜனை, தியானம், திவ்யநாம சங்கீா்த்தனம், டோலோத்ஸவம் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக, ஞாயிற்றுக்கிழமை (ஜன.28) காலை 8 மணிக்கு உஞ்சவிருத்தி, சீா் கொண்டு வருதல், ராதா கல்யாண உத்ஸவம் ஆகியவை நடைபெறும். தொடா்ந்து அன்னதானம் வழங்கப்படும். இரவு உபயநாச்சியாருடன் பெருமாள் வீதி உலா நடைபெறும். ஆஞ்சநேய உத்ஸவமும் நடைபெறும். ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகத்தினா், விழாக் குழுவினா், ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com