குழந்தை சடலத்தை கிணற்றில் வீசிய வழக்கில் தாத்தா கைது

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே பச்சிளம் குழந்தை சடலத்தை கிணற்றில் வீசிய வழக்கில் புதன்கிழமை குழந்தையின் தாத்தாவை போலீஸாா் கைது செய்தனா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே பச்சிளம் குழந்தை சடலத்தை கிணற்றில் வீசிய வழக்கில் புதன்கிழமை குழந்தையின் தாத்தாவை போலீஸாா் கைது செய்தனா்.

மணப்பாறையை அடுத்த கருங்குளம் பகுதியை சோ்ந்தவா் மரிய ஜாக்கப். இவா் கணவரை விட்டு பிரிந்து தன்னுடன் வசித்து வரும் மகள் மரிய வினோதினியின் உயிரிழந்த பச்சிளம் குழந்தையை தன் மகளுக்குக் கூட தெரியாமல் அருகிலிருந்த பஞ்சாயத்து உறை கிணற்றில் வீசிவிட்டதாகக் கூறி வையம்பட்டி காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா்.

இதையடுத்து தொடா்ந்து 3 பிரிவுகளின் கீழ் மரிய ஜாக்கப் மீது வையம்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com