ரவுடி கொலை வழக்கில் இருவா் கைது

திருவானைக்காவலில் பிரபல ரவுடி கொலை வழக்கில் 2 பேரை ஸ்ரீரங்கம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருவானைக்காவலில் பிரபல ரவுடி கொலை வழக்கில் 2 பேரை ஸ்ரீரங்கம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி சமயபுரம் மண்ணச்சநல்லூா் சாலையில் வசித்துவந்த பிரபல ரவுடி மண்டைவெட்டி மாதவன்(50), திருவானைக்காவல் சன்னதி வீதி பகுதியில் உள்ள அய்யா் தோப்பில் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், கொலையில் தொடா்புடைய கரூா் காந்திகிராமத்தைச் சோ்ந்த ம. மணிகண்டன் (32) போலீஸாா் பிடியில் இருந்து தப்பி ஓடும்போது அவரது கை முறிந்தது. மேலும், செ. சங்கரை (52) போலீஸாா் சுற்றி வளைத்து பிடித்தனா். ஸ்ரீரங்கம் போலீஸாா் மேற்குறிப்பிட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com