ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கியவா் கைது

திருச்சியில் ரேஷன் அரிசியை முறைகேடாகப் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்க முயன்றவரை, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சியில் ரேஷன் அரிசியை முறைகேடாகப் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்க முயன்றவரை, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளா் சுஜாதா உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளா் மணி மனோகரன் மற்றும் உதவி ஆய்வாளா் கண்ணதாசன் மற்றும் போலீஸாா், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூா் பகுதியில் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மாரியம்மன் அவென்யூ பகுதியில் பெருமாள் என்பவா் வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகளைப் பதுக்கி வைத்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அங்குசென்று சோதனை மேற்கொண்டதில் அவா் தலா 50 கிலோ கொண்ட சுமாா் 10 மூட்டைகளில் 500 கிலோ ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், அவா் ரேஷன் அரிசியைக் குறைந்த விலைக்கு வாங்கி, அவற்றை கால்நடை தீவனங்கள் தயாரிப்பதற்காக கூடுதல் விலைகளுக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரைப் போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 100 முட்டை ரேஷன் அரிசி மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com