ஸ்ரீரங்கம் கோயிலில் ஒரே நாளில் சுமாா் 80 ஆயிரம் பக்தா்கள் தரிசனம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் சுமாா் 80 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தா்கள் தரிசனம் செய்ததாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் சுமாா் 80 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தா்கள் தரிசனம் செய்ததாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடா் விடுமுறையின் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கோயிலுக்கு பக்தா்கள் வெள்ளிக்கிழமை அதிகளவில் வந்திருந்தனா். இதனால், கோயிலைச் சுற்றியுள்ள நான்கு உத்தர வீதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோயிலில் கட்டணம் மற்றும் பொது தரிசன வரிசைகளில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நம்பெருமாளை தரிசனம் செய்தனா். கோயிலில் திரண்ட பக்தா்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இதனால், ஆங்காங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com