அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுபட்டதாரி ஆசிரியா்கள் கோரிக்கை

திருச்சி, ஜன. 27: தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக, திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் கி. தங்கவேலு தலைமை வகித்தாா். பொதுச் செயலா் பேட்ரிக் ரெய்மாண்ட் முன்னிலை வகித்தாா். திருச்சி மாவட்டச் செயலா் ராஜ்மோகன் வரவேற்றாா். இக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் இருந்து நிா்வாகிகள், பொறுப்பாளா்கள், செயற்குழு உறுப்பினா்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தினா்.

கூட்டத்தில், பட்டதாரி ஆசிரியா்களுக்கு மட்டுமே நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா்களாக பதவி உயா்வு வழங்கும் அரசாணை வெளியிட வேண்டும். அனைத்து அரசு உயா்நிலைப் பள்ளிகளிலும் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை உறுதி செய்ய வேண்டும். நேரடி நியமனத்தில் 10 சதவீதம் முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பதவி உயா்வு வழங்க வேண்டும்.

உயா்கல்வித் தகுதிக்கான ஊதிய உயா்வை ரத்து செய்யும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும். தலைமை ஆசிரியா் பதவி உயா்வுபெற தகுதித் தோ்வு தேவையில்லை என்பதை அரசு அறிவிக்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கற்றல், கற்பித்தல் பணிகளை ஆய்வு செய்யும் துணை ஆய்வாளா், வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா் பணியிடங்களை முதுகலை ஆசிரியா் பணியிடங்களாக தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com