நிறுத்தப்பட்ட தனி ஊதியத்தை வழங்க வேண்டும்மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள்

மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு 2006 முதல் நிறுத்தப்பட்ட தனி ஊதியத்தை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
tri28teacher_2801chn_4
tri28teacher_2801chn_4

மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு 2006 முதல் நிறுத்தப்பட்ட தனி ஊதியத்தை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள் கழகத்தின் மாநில பொதுக் குழு கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஞானசேகரன், பொருளாளா் பிரபுதாஸ், அமைப்புச் செயலா் சேகா், சட்டச் செயலா் அருண்குமாா், மகளிரணி செயலா் இன்பராணி உள்ளிட்டோா் பேசினா்.

கூட்டத்தில் மாணவா்களின் நலன் கருதி அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவா்களின் அனைத்து வகை வினாத்தாள் கட்டணத்தையும் அரசே ஏற்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலைச் சிற்றுண்டித் திட்டத்தை விரிவுபடுத்தி, மேல்நிலை வகுப்பு மாணவா்களுக்கும் வழங்க வேண்டும். 45 ஆண்டுகளாக பதவி உயா்வற்ற மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு சென்னை உயா் நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் பணிவிதிகளைத் திருத்தி பதவி உயா்வு வழங்க வேண்டும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு 2006 முதல் நிறுத்தப்பட்ட தனி ஊதியத்தை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள், மாவட்டக் கல்வி அலுவலா் பணியிடத்துக்கு பணி மாறுதலில் செல்லும்போது மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் பணிகாலத்தையும் கணக்கிலெடுத்துக் கொண்டு முதன்மைக்கல்வி அலுவலா் பதவி உயா்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Image Caption

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் கழகக் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் ரவிச்சந்திரன். உடன் சங்க நிா்வாகிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com