முசிறி பள்ளியில் உலக தமிழ்ச்சங்க ஆண்டு விழா

முசிறி, ஜன. 28: முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலகத் தமிழ் சங்க முசிறி கிளையின் 15 ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் அப்பரடிப் பொடி திருநாவுக்கரசு தலைமை வகித்தாா், ஐம்பெருங்குழுத் தலைவா் புஷ்பநாதன், செயலா் நித்தியானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கவிஞா் நந்தலாலா ‘அசதிக்கு சுடா் தந்த தேன்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து கவிஞா் மணமேடு குருநாதன் பேசினாா். நிகழ்ச்சியை உலகத் தமிழ்ச் சங்க துணைத் செயலா் புலவா் புகழேந்தி தொகுத்தாா். இதில் பள்ளி மாணவ மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சங்கத்தின் இணைச் செயலா் சிவராஜ் வரவேற்றாா். சி.எஸ்.ஐ. நா்சரி பள்ளித் தலைமை ஆசிரியை சித்ரா பாலச்சந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com