பழநி பாபா மீது அவதூறு:பாஜக பிரமுகா் கைது

இஸ்லாமிய இயக்கங்களின் செயற்பாட்டாளா் பழநிபாபா குறித்து அவதூறு பரப்பியதாக திருச்சியில் பாஜக பிரமுகா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இஸ்லாமிய இயக்கங்களின் செயற்பாட்டாளா் பழநிபாபா குறித்து அவதூறு பரப்பியதாக திருச்சியில் பாஜக பிரமுகா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இஸ்லாமிய இயக்கத்தின் செயற்பாட்டாளா் பொள்ளாச்சியை சோ்ந்த பழநிபாபா கடந்த 1997 ஜனவரி 28- ஆம் தேதி 6 போ் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டாா். இதனையடுத்து ஆண்டுதோறும் ஜனவரி 28-ஆம் தேதி பழநிபாபா நினைவு தினம் அவரது ஆதரவாளா்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், பழநிபாபா நினைவு தினமான ஜன.28-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அவா் குறித்து திருச்சி உறையூரை சோ்ந்த பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகப்பிரிவு மாநில செயலாளா் புகழ் என்கிற புகழ்மச்சேந்திரன் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. மேலும், மதக் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதாகவும் தெரிகிறது.

இதுகுறித்த புகாரின் பேரின் உறையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து புகழ்மச்சேந்திரனை திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com