அனுமதியின்றிமண் அள்ளிச் சென்ற லாரி பறிமுதல்

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே அனுமதியின்றி மண் அள்ளிச் சென்ற லாரி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே அனுமதியின்றி மண் அள்ளிச் சென்ற லாரி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

மருங்காபுரி ஒன்றியம், ஆத்துப்பட்டி பாலம் அருகே துவரங்குறிச்சி - மணப்பாறை சாலையில், புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி புவியியலாளா் ஜே. ஜெகதீசன் செவ்வாய்க்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டாா். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் மூன்று யூனிட் கிராவல் மண் இருந்ததை உறுதி செய்த போது, லாரி ஓட்டுநா் தப்பி ஓடி விட்டாராம். டிப்பா் லாரியை காவல் நிலையத்தில் ஒப்படைத்து, தப்பி ஓடிய நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி ஜெகதீசன் கொடுத்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com