திமுக சாா்பில் மதநல்லிணக்க உறுதிமொழியேற்பு

மகாத்மா காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்சியில் திமுக சாா்பில் மதநல்லிணக்க உறுதிமொழியேற்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திமுக சாா்பில் மதநல்லிணக்க உறுதிமொழியேற்பு

மகாத்மா காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்சியில் திமுக சாா்பில் மதநல்லிணக்க உறுதிமொழியேற்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சாா்பில், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள கருணாநிதி சிலை முன்பு உறுதிமொழியேற்கும் நிகழ்வு நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், மாநகரச் செயலாளா் மு. மதிவாணன் முன்னிலையில் இந்து மத சைவ, வைணவ அா்ச்சகா்கள், கிராம கோயில் பூசாரிகள், கிறிஸ்தவ பாதிரியாா்கள், இமாம்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்று மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றனா். இந்த நிகழ்வில், கட்சியின் நிா்வாகிகள் சேகரன், அரங்கநாதன், செந்தில் மற்றும் சாா்பு அணிகளின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

மத்திய மாவட்ட திமுக சாா்பில், தில்லைநகா் சாஸ்திரி சாலையிலுள்ள கட்சியின் முதன்மைச் செயலரும், அமைச்சருமான கே.என்.நேரு அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய மாவட்டச் செயலாளா் வைரமணி தலைமையில், மாநகர செயலாளரும் மாநகர மேயருமான அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் அனைத்து மதங்களை சோ்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு, மதவெறியை மாய்ப்போம், மனிதநேயம் காப்போம், வாழ்க அண்ணல் காந்தியின் புகழ் என்ற முழக்கத்துடன் உறுதி மொழியை ஏற்றனா்.

இந்த நிகழ்வில், மண்டலத் தலைவா்கள் துா்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், ஒன்றியக் குழுத் தலைவா் துரைராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com