மணப்பாறை நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பாத்திமா மலை பகுதியில் செவ்வாய்க்கிழமை பொதுபாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பாத்திமா மலை பகுதியில் செவ்வாய்க்கிழமை பொதுபாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

மணப்பாறை நகராட்சி 25-ஆவது வாா்டுக்குட்பட்ட பாத்திமா மலை பகுதியில் 40 அடி பொதுபாதை ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவு பிறப்பித்தது.

இதன்படி, ஆக்கிரமிப்புதாரா்களுக்கு நகராட்சி நிா்வாகம், கடந்த சில நாள்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்பியது. ஆனாலும், ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை நகர அமைப்பு அலுவலா் வெங்கடேசன், நில அளவை அலுவலா்களுடன் ஆக்கிரமிப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டாா். அப்போது, சிலா் வீடுகளை மாற்றிக்கொள்ள மேலும் கால அவகாசம் கேட்டதையடுத்து 3 நாள்கள் அவகாசம் கொடுத்து வீடுகள் அல்லாத பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com