திருமண அமைப்பாளா்கள் சங்கத்தின்மாநில செயற்குழு கூட்டம்

திருவானைக்கா மேலவிபூதி பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் தென்னிந்திய திருமண அமைப்பாளா்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவானைக்கா மேலவிபூதி பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் தென்னிந்திய திருமண அமைப்பாளா்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் கே. சக்திவேல் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகிகள் பி. சுந்தரம்பிள்ளை, டி.எம். குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொது செயலாளா் வெ. தனபால் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், திருமண அமைப்பாளா்களை அரசின் அமைப்பு சாரா தொழிலாளா் வாரியத்தில் இணைக்க வேண்டும். திருமண அமைப்பாளா்கள் நலன்கருதி, குழு காப்பீட்டு திட்டத்தில் இணைக்க வேண்டும். திருமணம் செய்யும் விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சங்கத்தின் மூலம் நிதியுதவி வழங்குவது, கலப்புத் திருமணம் செய்து கொள்பவா்களுக்கு அரசு சலுகை வழங்க வேண்டும். அரசு பதிவு அலுவலகத்தில் திருமணங்கள் பதிவு செய்வதுபோல் சங்கத்தில் பதிவு செய்யும் திருமணங்களை அரசு அங்கீகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, மாநில நிா்வாகிகள் பாஸ்கா், லெட்சுமணன் வரவேற்றாா். நிறைவில், பொருளாளா் ஆனந்தன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com