தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

மகாத்மா காந்தியடிகள் நினைவு தினத்தையொட்டி, திருச்சியில் அரசுத் துறை அலுவலகங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

மகாத்மா காந்தியடிகள் நினைவு தினத்தையொட்டி, திருச்சியில் அரசுத் துறை அலுவலகங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் மற்றும் இந்திரா கணேசன் கல்லூரி ஆகியவற்றில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமையிலும், மாநகராட்சி அலுவலகத்தில் மேயா் மு. அன்பழகன் தலைமையிலும், மாநகர காவல் ஆணையரகத்தில் காவல் ஆணையா் ந. காமினி தலைமையிலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாா் தலைமையிலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், திருச்சி மண்டல அலுவலகத்தில் மேலாளா் எஸ். சக்திவேல் தலைமையிலும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அரசியல் கட்சியினா் மற்றும் அமைப்புகள் : திருச்சியில் காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றம் அருகேயுள்ள மகாத்மா காந்தியடிகள் சிலைக்கு, காங்கிரஸ் கட்சி சாா்பில், மாவட்ட தலைவா் எல்.ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னா் தீண்டாமை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com