துறையூா் நீதிமன்றத்தில்தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

துறையூா் நீதிமன்றங்களில் மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி செவ்வாய்க்கிழமை தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்கப்பட்டது.
துறையூா் நீதிமன்றத்தில்தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

துறையூா் நீதிமன்றங்களில் மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி செவ்வாய்க்கிழமை தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்கப்பட்டது.

துறையூா் சாா்பு நீதிபதி எம். ஜெயசங்கா், மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆா். சத்தியமூா்த்தி, குற்றவியல் நீதித்துறை நடுவா் நா்மதா ராணி ஆகியோா் தலைமையில் அவரவா் சாா்ந்த நீதிமன்றத்தில் மகாத்மா காந்தியடிகள் நினைவு தினத்தையொட்டி காலை 11 மணிக்கு 3 நிமிஷங்கள் மெளன அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்வில் நீதிமன்றப் பணியாளா்கள், துறையூா் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எஸ். சுரேஷ்குமாா், செயலா் பி. கோகிலா உள்ளிட்ட சங்க நிா்வாகிகள் மற்றும் வழக்குரைஞா்கள், அரசு வழக்குரைஞா்கள் யு.சபாபதி, எல். சந்திரமோகன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com